/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் மின்விளக்குகள்
/
நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் மின்விளக்குகள்
ADDED : ஆக 07, 2025 07:11 AM
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில்
நத்தம்பட்டி மேம் பாலத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளை உடனடியாக செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரை 71.6 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
இதில் அழகாபுரி, நத்தம்பட்டி, லட்சுமியா புரம், கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் உட்பட பல்வேறு பகுதி களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நத்தம்பட்டியை சுற்றி மூவரை வென்றான், சொக்கம்பட்டி, களத்தூர், பாறைபட்டி என பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் நத்தம்பட்டி மெயின்ரோட்டிற்கு வந்து தான் வெளியூர் பயணிக்கின்றனர். ஆனால், மேம்பாலத்தில் மின்விளக்குகள் இருந்தும் செயல்படாமல் இருண்டு காணப்படுவதால் ரோட்டை கடப்பதில் விபத்து அபாயம் காணப்படுகிறது. மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
எனவே, இங்குள்ள மின்விளக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.