தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி.,யில் சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு

 ஸ்ரீவி.,யில் சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு

 ஸ்ரீவி.,யில் சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு


ADDED : ஜன 04, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் , அதனை ஒட்டி உள்ள பிற வனக்கோட்ட பகுதிகளில் சிங்கவால் குரங்கு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த கணக்கெடுப்பு பணிகளை வனத்துறை துவக்கவுள்ளது.

தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள வன உயிரினங்களான சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி செந்துடுக்கு மீன் போன்றவற்றை காக்க தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்கள், மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை, கண்காணிப்பு முறைகள், வாழ்வியல் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பதில் உள்ள சவால்கள் உட்பட பல்வேறு வகை காரணிகளை கண்டறிந்து, கணக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறையினருக்கு கணக்கெடுப்பு தொடர்பான பல பயிற்சிகளை வனத்துறை உயர் அதிகாரிகளும், உயிரியல், சூழலியல் அறிஞர்களும் அளிக்கின்றனர்.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் விரைவில் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்குமென வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us