ADDED : பிப் 01, 2025 04:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 46 வது கலைச்சங்கம ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். மாணவி வைஷ்ணவி வரவேற்றார். பள்ளி முதல்வர் சுந்தர மகாலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். லயன் சங்க கவர்னர் அய்யாதுரை, லயன்ஸ் மகளிர் சங்க முதல் பெண்மணி சுப்புலட்சுமி ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.
விழாவில் மாற்றுத்திறனாளி, ஏழை மாணவர்களின் பெற்றோர், வள்ளலார் அறக்கட்டளை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சாதனை மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாக குழுவினர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், இயக்குனர் கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் ஹரி கார்த்திக் நன்றி கூறினார்.