ADDED : பிப் 24, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை இ.எல்.ரெட்டிபட்டியை சேர்ந்தவர் பெருமாள் 58, சிவசங்குபட்டி விலக்கு அருகே மது பாட்டில் விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 180 மி.லி., அளவு கொண்ட 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
* வெம்பக்கோட்டை அன்னபூரணிபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளாண்டி 41. அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக் கோட்டை போலீசார் விசாரிக் கின்றனர்.
