ADDED : அக் 11, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வேதியியல் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிபவர் ராமன். இவர் அமெரிக்கா கலிபோர்னியாவின் ஸ்டான் போர்டு பல்கலை வெளியிட்ட சர்வதேச அளவிலான 2 சதவீத தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 5 வது ஆண்டாக இடம் பெற்றுள்ளார்.
இவரை கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ் பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

