ADDED : செப் 07, 2025 02:49 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது.
பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். லலிதா முன்னிலை வகித்தார். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தாய், தந்தை, ஆசிரியர் மூவரையும் மதிக்க தெரிந்தவர்களை வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். குற்றத்தை செய்தவர் மறைத்து தண்டனையிலிருந்து தப்பி விடலாம்.
ஆனால் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்ப முடியாமல் அதுவே பெரிய தண்டனை ஆகிவிடும். டிஜிட்டல் உலகத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதால் சமூக சிக்கல்களையும், பழக்கத்தை மேம்படுத்துவதால் நல்ல பலன்களை காண முடியும் என்றார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி ஹன்சிகா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை முதல்வர் சுதா, உடற்கல்வி இயக்குனர் செந்தாமரை கண்ணன் நிர்வாகி ராமராஜ், கணேசன், முனீஸ்வரன் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.