/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமி மாயம்: தாய் தற்கொலை முயற்சி
/
சிறுமி மாயம்: தாய் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 24, 2025 05:05 AM
நரிக்குடி: நரிக்குடி அருகே மாயமான சிறுமியை மீட்க வேண்டி தாய் தற்கொலைக்கு முயன்றார்.
நரிக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். ஜூலை 12ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
காலையில் பார்த்தபோது காணவில்லை. வீரசோழன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவைகளை ஆய்வு செய்த போது அப் பகுதியை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிறுமியை கூட்டிச் செல்வது தெரிந்தது.
கட்டிட தொழில் செய்து வரும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர்.
மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் மகளை மீட்க கோரி தாய் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.