விருதுநகரில் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 21, 2026 07:29 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் டி.என்.சி.எஸ்.சி.,ன் சுமை துாக்கும் தொழிலாளர்கள் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகை பதிவேட்டில் பெயர் சேர்ப்பது, அங்கீகார தேர்தலை உடனே நடத்துவது, 10 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு பச்சை அட்டை வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் அன்னக்கொடி தலைமை வகித்தார். செயலாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
