/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடிகளில் அடிப்படை வசதிகளுக்கு பெற்றோர் ஏக்கம்; பெயர்ந்த தரை, கூரையால் குழந்தைகளை அனுப்ப தயக்கம்

UPDATED : ஆக 05, 2025 07:57 AM
ADDED : ஆக 05, 2025 06:17 AM

அங்கன்வாடிகளில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பி வைக்கின்றனர். மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகள் இந்த பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல அங்கன்வாடிகளில் தரை தளம் பெயர்ந்தும், கூரைகளில் சிமென்ட் பூச்சி விழுந்தும் பல இடங்களில் கூரைகளிலிருந்து மழை தண்ணீர் தேங்கி ஒழுகியும் வருகிறது.
மேலும் பல கட்டடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகும் நிலையில் இவற்றின் தரை தளம், கூரை பெயர்ந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. பல இடங்களில் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டத்தில் இட நெருக்கடியில் இருப்பதால் மிகுந்த சிரமமப்படுகின்றனர்.
குழந்தைகளுக்காக சத்துணவு சத்துமாவு, பயறு வகைகள் உணவாக வழங்கப்படுகிறது. இதனை தயாரிக்க தனியாக சமையல் கூடங்கள் இல்லாத நிலையில் அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகள் உறங்கும் பகுதியிலேயே சமையல் பணியும் செய்வதால் குழந்தைகள் வெப்பத்தால் அவதிப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி இல்லாதால் குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். மேலும் அங்கன்வாடி பள்ளிகள் சுற்றுச்சுவர் இன்றி அமைக்கப்பட்டு உள்ளதால் தெருநாய் ,ஆடு போன்ற கால்நடைகள் சாப்பாடு பறிமாறும் நேரத்தில் அங்கன்வாடி பள்ளிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.
இது போன்ற தருணங்களில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் குழந்தைகளை காப்பதற்காக பெரிதும் சிரமப்படும் நிலை உள்ளது. குறிப்பாக தெரு நாய்கள் புகுந்து குழந்தைகளுக்கு வைக்கப்படும் சாப்பாடுகளை சாப்பிட்டு விடுவதால் பெரும்பான்மையான நேரங்களில் கதவுகளை மூடி வைக்கும் நிலை உள்ளது. அங்கன்வாடி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சேதமான கட்டசுற்றுச் சுவர் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.