UPDATED : மே 23, 2026 11:26 PM
ADDED : மே 23, 2026 11:21 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி:நரிக்குடி மேலேந்தல் பகுதியில் திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி தலைமையிலான சிப்காட் நில எடுப்பு அலுவலர் துரைமுருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சுழியில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு திருப்புவனம் நோக்கி டிப்பர் லாரி சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆனந்தராஜ் 41, ஓட்டினார். நரிக்குடி மேலேந்தல் அருகே வந்த போது லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் அனுமதி இன்றி ஜல்லி ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து நரிக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.
டிரைவர் ஆனந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
