/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரி கோடவுனில் வெடி விபத்து ஏஜென்ட் மீது வழக்கு
/
லாரி கோடவுனில் வெடி விபத்து ஏஜென்ட் மீது வழக்கு
ADDED : செப் 27, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் மேட்டூர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தை நிறுவனத்தின் ஏஜென்ட் ராஜேந்திரன் மீது போலீசார் பதிவு செய்தனர்.
சிவகாசி - சாத்துார் ரோடு சிவகாமிபுரம் காலனி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் உள்ளது. நேற்று முன்தினம்மாலை 6:00 மணி அளவில் லோடு வேனில் கொண்டு வந்த பட்டாசுகளை இறக்கி கொண்டிருந்த போது, உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஏஜென்ட் ராஜேந்திரன் 56, மீது வழக்கு பதிவு செய்தனர்.

