/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மந்தையில் புகுந்த லாரி 7 மாடுகள் உயிரிழப்பு
/
மந்தையில் புகுந்த லாரி 7 மாடுகள் உயிரிழப்பு
ADDED : பிப் 01, 2026 06:36 AM

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளம் அருகே, பால் டேங்கர் லாரி மோதியதில், 7 கிடை மாடுகள் பலியாகின.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, இலுப்பைகுளத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 31. இவர், 1,000க்கும் மேற்பட்ட நாட்டு கிடை மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை மேய்ச்சலுக்காக, காரியாபட்டி பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் தொழுவத்திற்கு கொண்டு சென்றார். அதுபோல, நேற்று அதிகாலை, காரியாபட்டி -- நரிக்குடி ரோட்டில், 10 பேர் மாடுகளை அழைத்துச் சென்றனர்.
முடுக்கன்குளம் அருகே வந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் டேங்கர் லாரி, சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதியதில், ராஜகோபாலுக்கு சொந்தமான ஐந்து பசு மாடுகள் உட்பட, 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
மேலும், 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்தன. விபத்தை ஏற்படுத்தி, நிற்காமல் சென்ற லாரியை, பொதுமக்கள் பிடித்து, அ.முக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை, நல்லுாரை சேர்ந்த லாரி டிரைவர், சுரேந்தர் 40, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

