/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதி பெறாத கட்டடங்களுக்கு மின் இணைப்பு கொடுப்பதால்... வருவாய் இழப்பு : விதிகளைக் கோட்டை விடுவதில் மாறி மாறி கை காட்டும் துறைகள்

ADDED : ஆக 14, 2025 02:22 AM

மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் அனுமதியில்லாத இடங்களில் வணிக ரீதியான கட்டடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. அதே போல் நீர்நிலைகள் மீது கட்டடம் கட்டினாலும் அதன் மீதும் நடவடிக்கை எடுப்பதும் குறைந்து வருகிறது.
இந்த ஆக்கிரமிப் பாளர்கள் எவ்வழி யிலாவது அரசியல் பின் புலத்தை பயன்படுத்தி மின் இணைப்பு பெற்று விடுகின்றனர். வணிக கட்டடமாக இருந்து 14 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டிருந்தால் நகராட்சி சார்பில் நிறைவு சான்று வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இணைப்பு கொடுக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட மின்துறையினர் 'கவனிப்புகளுக்கு' பின் மின் இணைப்பு வழங்கி விடுகின்றனர். அதேபோல் 'டேரிப் 5' எனும் மின் திட்டம் வணிக கடை களுக்கு தான் கொடுக்க வேண்டும். லாப நோக்கிற்காக தற்காலிக கடைளுக்கும் கொடுக் கின்றனர்.
சிறிய கட்டடமாக இருந்தால் தீர்வை ரசீது வைத்தே மின்வாரியமே இணைப்பு வழங்கி விடும். அதன் உயரம் 14 மீட்டருக்கு மேல் செல்லும் போது நகராட்சி நிறைவு சான்று தர வேண்டும். ஆனால் நிறைவு சான்று போடாமல் தீர்வை ரசீது போடுகின்றனர். இதனால் தீர்வை வைத்து சிலர் மின் இணைப்பு பெற்று விடுகின்றனர். நகராட்சியின் இந்த செய லாலும் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாக மின் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
நிறைவு சான்று இல்லாமல் பெறும் இது போன்ற கட்டடங்களால் விபத்து வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்துறைக்கு மறைமுக வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள நான்கு மாடி கட்டடத்திற்கும், தீயணைப்பு சான்றுகள் கூட இல்லாத ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தற்காலிக கடைக்கும் மின் இணைப்பு வழங்கி யுள்ளனர்.
அந்த தற்காலிக கடைக்கு விதியை மீறி டேரிப் 5 எனும் மின் திட்டம் செயல்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு குறைந்த மின் கட்டணமே வரும். இதற்கு அரசியல் பலம் இருப்பதால் மின்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இது தொடர்பாக மின்துறையின் விஜிலன்ஸ் பிரிவு ஆய்வு செய்துள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மின்துறை, நகராட்சி நிர்வாகங்கள் மின் இணைப்பில் செய்யும் குளறுபடிகளை கண்டறிந்து தடுக்க வேண்டும்.