/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லுாஸ் எண்ணெய் விற்பனை அதிகரிப்பு; கலப்பட வாய்ப்பால் வாடிக்கையாளர்கள் அச்சம்
/
லுாஸ் எண்ணெய் விற்பனை அதிகரிப்பு; கலப்பட வாய்ப்பால் வாடிக்கையாளர்கள் அச்சம்
லுாஸ் எண்ணெய் விற்பனை அதிகரிப்பு; கலப்பட வாய்ப்பால் வாடிக்கையாளர்கள் அச்சம்
லுாஸ் எண்ணெய் விற்பனை அதிகரிப்பு; கலப்பட வாய்ப்பால் வாடிக்கையாளர்கள் அச்சம்
ADDED : செப் 02, 2025 11:41 PM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் லுாஸ் எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளதால் கலப்பட வாய்ப்பும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர்.
மாவட்டத்தில் லுாஸ் (தளர்வான) சமையல் எண்ணெய் விற்பனை, குறிப்பாக பாக்கெட்டுகள், டின்களில் அடைக்கப்படாத எண்ணெய் விற்பனை செய்வது, கலப்படத்தைத் தடுக்கவும், உடல்நலத்தைப் பாதுகாக்கவும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உணவு பாதுகாப்புத்துறை இதை கண்காணித்து வருகிறது.
ஆனால் விருதுநகர் மாவட்டம் எண்ணெய் வியாபாரத்தில் முன்னணியில் உள்ளதால் நகர்ப்பகுதிகளில் தெருவுக்கு தெரு எண்ணெய் கடைகள் உள்ளன. இவற்றில் சிலர் இன்னும் லுாஸ் எண்ணெய் வகைகளை விற்கின்றனர்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத எண்ணெய்களில் மற்ற எண்ணெய் வகைகள் அல்லது பிற கலப்படப் பொருட்களைச் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம். கலப்பட எண்ணெய் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத எண்ணெய்கள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்படலாம்.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு, லுாஸ் எண்ணெய் விற்பனையைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சமையல் எண்ணெயை பேக்கிங் செய்யாமல் லுாஸ் வடிவில் விற்பனை செய்வதை தடுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு நகர்ப்பகுதிகளில் இன்னும் இந்த விதிமீறல் தொடர்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியமாகிறது. மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட்டு இது போன்று லுாஸ் எண்ணெய் வகைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில், டின்களில் இல்லாத எண்ணெய் வகைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடைக்காரர்களும் ஒரே டின்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இதையும் சரி செய்ய வேண்டும். வியாபார கூட்டமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.