ADDED : நவ 05, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மா.கம்யூ., சார்பில், உரிய காலத்தில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்தும், ரூ.100க்கு குறைவாக சொத்து வரி இருந்ததை திடீரென ரூ.500க்குமேல் உயர்த்தியதை கண்டித்தும், குழாய் உடைந்து வீணாக குடிநீர் செல்வதை உடனடியாக சரி செய்தல்,உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் குழு உறுப்பினர் மரிய டேவிட் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, கட்சி நிர்வாகிகள் ரேணுகாதேவி, பிரபு, பிச்சைகனி, அங்கு ராஜ், சசிகுமார், ஜெயக்குமார் பங்கேற்றனர்.

