/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சபரிமலை சீசனை முன்னிட்டு தேவை மதுரை - புனலுார் ரயில் சேவை' தென் மாவட்ட பக்தர்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 27, 2025 12:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சபரிமலை கார்த்திகை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு மதுரையில் இருந்து தினமும் காலை 6:00 மணி, மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை வழியாக புனலூர் சென்று திரும்பும் வகையில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் வரை ஐயப்பனை தரிசிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
மதுரையில் இருந்து தென் மாவட்ட பக்தர்கள் சபரிமலை சென்று வர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்தாண்டு நவ., 16 முதல் கார்த்திகை மாத மண்டல பூஜை சீசன் துவங்க உள்ளதால் மதுரையில் இருந்து தினமும் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு புனலூர் சென்றடைந்து, மறு மார்க்கத்தில் புனலூரில் மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:00 மணிக்கு மதுரை வந்தடையும் வகையிலும், மேலும் மதுரையில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 12:00 மணிக்கு புனலூர் சென்றடைந்து, அங்கிருந்து மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு புறப்பட்டு காலை 7:00 மணிக்குள் மதுரை வந்தடையும் வகையிலும் ரயில்களை இயக்க வேண்டும்.