sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மதுரை--செங்கோட்டை ரயில்: கூடுதல் சேவை தேவை

/

 மதுரை--செங்கோட்டை ரயில்: கூடுதல் சேவை தேவை

 மதுரை--செங்கோட்டை ரயில்: கூடுதல் சேவை தேவை

 மதுரை--செங்கோட்டை ரயில்: கூடுதல் சேவை தேவை


ADDED : ஜன 12, 2026 06:29 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: பொங்கல் போக்கு வரத்து நெருக்கடியை சமாளிக்க மதுரையில் இருந்து செங் கோட்டைக்கு கூடுதலாக ஒரு முறை பாசஞ்சர் ரயில் இயக்க நிர்வாகம் முன் வர வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அதிகஅளவில் மதுரைக்கு வந்து செல்கின்றனர். இவர் களின் நலனுக்காக செங்கோட்டையிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரை இயங்கிய பாசஞ்சர் ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

கடந்த சில மாதங் களாக இந்த ரயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, வழியாக மயிலாடுதுறை செல்வதால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரை வந்து செல்ல ரயில் இல்லாமல் சிரமப் படுகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ஒரு மடங்கு மக்கள் பயணிக்கும் நிலையில் மதுரைக்கு கூடுதலாக ஒரு நேரம் ரயில் தேவைப் படுகிறது.

எனவே செங் கோட்டையில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:40 மணிக்கு மதுரை வரும் பயணிகள் ரயிலை மீண்டும் மறுமார்க்கத்தில் இரவு 9:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 12:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையில் இயக்கினால் கோவை-- மதுரை ரயில், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பயணிகளுக்கு இணைப்பு வசதி கிடைக்கும்.

மறு மார்க்கத்தில் அதிகாலை 3:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 6:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் கூடுதலாக ஒரு முறை இந்த பாசஞ்சர் ரயிலை இயக்கினால், வைகை, கோவை ரயிலில் பயணிக்க முடியும்.

எனவே இந்த வழித் தடத்தில் கூடுதலாக ஒரு நேரம் ரயிலை இயக்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 3 மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us