/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாற்றில் மகாளய அமாவாசை தர்ப்பணம்
/
குண்டாற்றில் மகாளய அமாவாசை தர்ப்பணம்
ADDED : செப் 22, 2025 03:23 AM

திருச்சுழி, : திருச்சுழி குண்டாற்றில் மகாளய அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது காசி, ராமேஸ்வரத்தில் செய்த புண்ணியம் கிடைக்கும். மகாளய அமாவாசையான நேற்று திருச்சுழி குண்டாற்றில் உள்ளூர், வெளியூரை சேர்ந்த மக்கள் தங்கள் முன்னோருக்காக ஆற்றில் நீராடி வரிசையாக அமர்ந்து விரதம் இருந்து தர்ப்பணம் செய்தனர். திருமேனி நாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து மோட்ச தீபம் ஏற்றினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
ராஜபாளையத்திலும் இதனை முன்னிட்டு நீர்நிலைகளான அய்யனார் கோயில், முடங்கியாறு, பர்வத வர்த்தினி கோயில் அருகே தெப்பம் உள்ளிட்ட இடங்களில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி திரளானவர்கள் வழிபாடு செய்தனர். விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.