/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மினி டேங்கர் குடிநீர் வண்டிகளில் துாய்மை பராமரிப்பு : கோடையில் ஏற்படும் நீர் நோய்களை தடுக்க முடியும்
/
மினி டேங்கர் குடிநீர் வண்டிகளில் துாய்மை பராமரிப்பு : கோடையில் ஏற்படும் நீர் நோய்களை தடுக்க முடியும்
மினி டேங்கர் குடிநீர் வண்டிகளில் துாய்மை பராமரிப்பு : கோடையில் ஏற்படும் நீர் நோய்களை தடுக்க முடியும்
மினி டேங்கர் குடிநீர் வண்டிகளில் துாய்மை பராமரிப்பு : கோடையில் ஏற்படும் நீர் நோய்களை தடுக்க முடியும்
ADDED : மே 08, 2025 02:00 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் பெருவாரியான மக்கள் மினி டேங்கர் குடிநீர் வண்டிகளில் வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தான் குடிக்கின்றனர். தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது போன்ற நேரங்களில் சிலர் கழுவாத டேங்கர்களை கொண்டும் வினியோகிப்பதால் நீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உணவு பாதுகாப்புத்துறையினர் கண்காணித்து நோய்கள் வராமல் தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் வழங்கப்படும் குடிநீரானது, ஒன்று வெளியூர் நீராதாரம், உள்ளூர் நீராதாரம் கலந்து கொடுக்கப்படுகிறது அல்லது உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து வழங்கப்படுகிறது.
உள்ளாட்சிகள் மூலம் வழங்கப்படும் இந்த இரண்டு வகை குடிநீரும் உவர்ப்பு தன்மை உள்ளதாக உள்ளது. பகுதிகள், நீர்நிலைகளுக்கு ஏற்ப இது மாறுபடுகிறது.
உவர்ப்பு தன்மை, பி.எச்., அளவு அதிகம் உள்ள நீரை மக்கள் குடிப்பதில்லை. இதனால் மாவட்டத்தில் பரவலாக மினி டேங்கர் வண்டிகளில் வரும் குடிநீர் தான் அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் உரிமையாளர்கள்இதன் சுத்திகரிப்பின் தன்மைக்காக உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்று இயங்குகின்றனர். இவ்வாறு வினியோகிக்கப்படும் இந்த குடிநீரில் அதன் தரத்தை ஆய்வதும் அவசியமாகிறது. காரணம் பல வண்டிகள் டேங்கர் தொட்டிகளை சுத்தம் செய்வதே கிடையாது. தினசரி பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்கின்றனர்.
இதே போல் குடிநீர் சுத்திகரிக்கப்படும் இடங்களிலும் அவற்றின் துாய்மையின் தன்மையை ஆராய்வது அவசியமாகிறது.
இது போன்று சுத்தம் செய்யாமல் வினியோகிக்கப்படும் தொட்டிகளில் இருந்து நீர் மூலம் பரவும்டையரியா உள்ளிட்ட நோய்கள் தாக்கும். குழந்தைகள் குடித்தால் நிச்சயம் வாந்தி, பேதி உபாதைகள் ஏற்படும். கோடையில் டேங்கர் லாரிகள் வலம் வருவது அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். பராமரிப்பு செய்யாத வண்டிகளின் உரிமையாளர்கள் மீது அபராத நடவடிக்கை எடுத்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கு உத்தரவிட வேண்டும்.

