/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்
/
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்
ADDED : நவ 17, 2025 02:12 AM
திருச்சுழி: திருச்சூர் அருகே உள்ள கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிட்டதில் அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் விவசாயிகள் மருந்துகள் அடித்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சுழி அருகே ஆலடிபட்டி, கல்யாண சுந்தரபுரம், மீனாட்சிபுரம், கரிசல்குளம் ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சரியான மழை இன்மை, காட்டுப்பன்றிகளின் அட்டூழியம் இவற்றையெல்லாம் தாக்குப்பிடித்து மக்காச்சோளம் வளர்ந்த நிலையில், தற்போது பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் உள்ளது.
மக்காச்சோள கதிரில் உள்ள குருத்துகளில் நுழைந்து ஒவ்வொரு பகுதியாக சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரை காப்பாற்றும் வகையில் படை புழுக்களை அழிக்கும் விதமாக மருந்து அடிக்கும் மும்முரத்தில் உள்ளனர். படை புழுக்களை அழிக்க, தடுக்க முறையான அறிவுறுத்தல் வேளாண் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

