/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி
/
சாத்துாரில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி
சாத்துாரில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி
சாத்துாரில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி
ADDED : நவ 11, 2025 03:23 AM
சாத்துார்: சாத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் மேய்ந்து விடுவதால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
சாத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பட்டி,வடமலாபுரம், ஊஞ்சம் பட்டி, ராமச்சந்திராபுரம்,இரவார் பட்டி, சங்கரநத்தம்,உள்ளிட்ட கிராமங்களில் பல நுாறு ஏக்கரில் மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை செலவு செய்த நிலையில் மக்காச்சோள பயிர் விளைந்து வரும்போது காட்டுப்பன்றிகள் பயிர்களை மேய்ந்து விட்டு செல்வதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் உரிய இழப்பீடு தருவதாக அறிவித்துள்ள போதும் முறையான கணக்கெடுப்பு எடுத்து விரைந்து இழப்பீடு தொகை வழங்கவில்லை என்ற புகார் விவசாயிகள் மத்தியில் உள்ளது.
இது குறித்து ரங்கப்பநாயக்கன்பட்டி மானாவாரி விவசாயி லட்சுமி காந்தன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட மக்காச்சோள பயிர் முழுவதையும் காட்டுப்பன்றிகள் மேய்ந்து விட்டு சென்று விட்டன. 2 தடவையாக 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். அந்தப் பயிரையும் காட்டுப்பன்றிகள் தின்று நாசம் செய்து விட்டது.தற்போது 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். இது முளையிட்டு வளரும்போதே தற்போது காட்டுப்பன்றிகள் காட்டுக்குள் புகுந்து பயிரை தின்று விட்டன.
எனக்கு ஏற்கனவே வனத்துறையினர் தருவதாக கூறிய இழப்பீடு தொகை இன்று வரை தரவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகள் இதனால் மிகுந்த மனவேதனை அடைந்து வருகிறோம். இழப்பீடு தொகையை தாமதம் இன்றி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

