நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம் : தளவாய்புரம் அடுத்த முகவூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் நீண்ட நாட்களாக பூட்டி கிடந்த அண்ணாமலை என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நேற்று மதியம் அருகிலிருந்த வீட்டின் வழியே ஏறி பார்த்தபோது பூட்டிய வீட்டிற்குள் நைலான் கயிற்றில் துாக்கில் தொங்கியவாறு ஆண் சடலம் கிடந்தது. இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் துர்நாற்றம் வீசி உள்ளது.
இறந்தவர் சொக்கநாதன்புத்ததுாரை சேர்ந்த செல்வராஜ் 37, என தெரிந்தது. அருகில் உள்ள வீட்டில் கட்டட பணி நடந்து வரும் நிலையில் சாரம் வழியே உள்ளே சென்று துாக்கில் தொங்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.