மல்லி- -- கிருஷ்ணன் கோவில் ரோடு விரிவாக்க பணிகள் துவக்கம்
மல்லி- -- கிருஷ்ணன் கோவில் ரோடு விரிவாக்க பணிகள் துவக்கம்
ADDED : அக் 07, 2024 04:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து பாட்டக்குளம், விழுப்பனுார் வழியாக மல்லி செல்லும் ரோடு அகலப்படுத்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணன்கோவிலில் இருந்து 9.2 கி.மீ., துாரத்தில் உள்ள மல்லி வழியாக சிவகாசிக்கு நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வந்தது. கல்லுாரி மாணவர்கள், பட்டாசு ஆலை ஊழியர்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வராமல் மல்லி வழியாக சிவகாசிக்கு இயங்கி வருகிறது.
இதனால் போக்குவரத்து நெருக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த ரோடு இடை வழித்தடமாக மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு பணிகள் துவங்கியுள்ளது.
இதன்படி தற்போது 3.75 மீட்டர் அகலம் உள்ள ரோடு 5.30 மீ. அகலம் உள்ள ரோடாக மாற்றப்பட உள்ளது. இதனால் கிருஷ்ணன் கோவில் மல்லி வழியாக சிவகாசிக்கு பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
