/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூ வீலரில் பணம் திருடியவர் கைது
/
டூ வீலரில் பணம் திருடியவர் கைது
ADDED : செப் 10, 2025 02:04 AM
சாத்துார், செப். 10--
சாத்துாரில் வங்கி முன்பு இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.6.47 லட்சத்தை திருடிய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குமாரா 45, என்பவரை போலீசார் கைது செய்து ரூ.4.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அ.இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம் ஆக. 19 ல் எஸ்.பி.ஐ. வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ 6.47லட்சத்தை எடுத்துக் கொண்டு வங்கி முன்பு நின்ற தனது இருசக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள பழக் கடைக்கு சென்று பழம் வாங்கி திரும்பி வந்து வண்டியில் வைத்த போது அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சாத்துார் போலீசார் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு பணத்தை திருடிய வரை தேடி வந்தனர்.போலீஸ் விசாரணையில் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த குமாரா, 45. என்பவர் பணத்தை திருடியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நான்கு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக் கின்றனர்.