/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் உண்டியல் திருட்டில் கைதானவர் தப்ப முயற்சி --
/
கோயில் உண்டியல் திருட்டில் கைதானவர் தப்ப முயற்சி --
கோயில் உண்டியல் திருட்டில் கைதானவர் தப்ப முயற்சி --
கோயில் உண்டியல் திருட்டில் கைதானவர் தப்ப முயற்சி --
ADDED : டிச 13, 2025 01:20 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பூமாரி அம்மன் கோயில் நகை, உண்டியலை உடைத்து திருடியதாக கைதானவர் தப்ப முயன்றதில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
மலையடிப்பட்டி பூமாரி அம்மன் கோயிலில் நவ., 27ல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், அம்மன் கழுத்தில் இருந்த தங்க டாலர் பதித்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்டதாக இரு சிறுவர்களை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
தெற்கு மலையடிப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த சுந்தரேஷ்வரன் என்ற சுந்தர் 31, போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
இவர் மீது மூன்று கொலை உட்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ராஜபாளையம் சஞ்சீவி மலை அருகே பதுங்கியிருந்த சுந்தரேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட நகைகளை அயன் கொல்லங்கொண்டான் அருகே பதுக்கி வைத்ததை ஒப்புக் கொண்டார்.
நகைகளை மீட்க போலீசார் அழைத்து சென்ற போது பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றார். இதில் கீழே விழுந்ததில் வலது காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மாவு கட்டு போடப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

