/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: துப்பாக்கியுடன் ஏட்டு கைது
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: துப்பாக்கியுடன் ஏட்டு கைது
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: துப்பாக்கியுடன் ஏட்டு கைது
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: துப்பாக்கியுடன் ஏட்டு கைது
ADDED : ஆக 25, 2025 11:46 PM

ஸ்ரீவில்லிபுத்துார்::
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஏட்டு தனுஷ்கோடியை 40, வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ரங்கர் கோயில் பகுதியில் வனச்சரகர் செல்வமணி, ஊழியர்கள் பொன் பிருந்தா, கார்த்திக் ராஜா, ஜார்ஜ் குட்டி குழுவினர் ரோந்து சென்றனர்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கொலைகாரன் பாறை என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்ட இடத்திற்கு இவர்கள் சென்ற போது, மூன்று பேர் கொண்ட குழுவினர், நாட்டுத் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களில் இருவர் டூவீலரில் தப்பிய நிலையில் மீதமிருந்த ஒருவர், வன ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
வனத்துறையினர் அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்துார் வனஅலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
வனத்துறையினரின் விசாரணையில், பிடிபட்டவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பதும், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிவதும் தெரிந்தது.
தனுஷ்கோடியை வனத்துறையினர் கைது செய்து, ஒரு நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தங்கராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தனுஷ்கோடியை ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.