ADDED : ஏப் 07, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வரிசையூரை சேர்ந்தவர் முத்துமுருகன் 22. நேற்று மாலை இவருக்கு சொந்தமான டிராக்டரை ஒட்டங்குளத்திற்கு ஓட்டி சென்றார்.
உடன் சென்ற லட்சுமணன் 28, டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார். அவரது கால் 'ரொட்டேட்டர்'ரில் சிக்கியது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அவரது கால் மீட்கப்பட்டது. கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த லட்சுமணன் வலி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலே பலியானார். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.
