ADDED : ஜூன் 10, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: கமுதியை சேர்ந்தவர் போண்டா மணி, 44, இவர் 2025ல், திருச் சுழியில் டாஸ்மாக் கடை கொள்ளையில் சம்பந்தப்பட்டவர். இவரை திருச்சுழி போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமினில் வெளிவந்தவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதில், கொலை உட்பட, பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால், இவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை திருச்சுழி டி.எஸ்.பி., பிரதீப் ரத்து செய்ய கோரி, பரிந்துரை செய்தார். திருச்சுழி கோர்ட் ஜாமினை ரத்து செய்ததையடுத்து திருச்சுழி போலீசார் போண்டா மணியை சிறையில் அடைத்தனர்.
