ADDED : ஆக 18, 2026 08:33 PM
விருதுநகர்: சாத்துார் மேட்டமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் காளிதாஸ்.
இவரது மனைவி, பக்கத்து வீட்டில் வசிப்பவரின் அலைபேசி வாங்கி அடிக்கடி பேசி, இன்ஸ்டாகிராம் போலி கணக்கில் இருந்து, அதே தெருவில் வசிக்கும் ராஜா என்பவரின் மனைவிக்கு தவறான மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, அவரது உறவினர் காளிதாஸை அடித்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பிலும் சாத்துார் போலீஸ்சில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ராஜா, காளிதாஸை அடித்ததாக கூறி காளிதாஸ், தனது மனைவியுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தார். இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களைத் தடுத்து சூலக்கரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.
