/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் மங்கம்மாள் ரோடு-- அவஸ்தையில் தளவாய்புரம் மக்கள்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் மங்கம்மாள் ரோடு-- அவஸ்தையில் தளவாய்புரம் மக்கள்
ஆக்கிரமிப்பின் பிடியில் மங்கம்மாள் ரோடு-- அவஸ்தையில் தளவாய்புரம் மக்கள்
ஆக்கிரமிப்பின் பிடியில் மங்கம்மாள் ரோடு-- அவஸ்தையில் தளவாய்புரம் மக்கள்
UPDATED : ஜன 03, 2026 06:27 AM
ADDED : ஜன 03, 2026 06:13 AM

தளவாய்புரம்: தளவாய்புரம் ராணி மங்கம்மாள் சாலையில் இருபுறமும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் அடுத்து உள்ள தளவாய்புரம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கி செட்டியார்பட்டி பேரூராட்சி, முகவூர் வரை குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி கடைகளின் எண்ணிக்கை ரோட்டின் இருபுறமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு முன்பகுதியை வரை செட் அமைப்பதோடு மின்கம்பம், நிழலுக்காக அமைக்கப்பட்ட மரங்கள் என இரு பக்கமும் ஆக்கிரமிப்புகளை அதிகரித்துள்ளனர்.
இதனால் தளவாய்புரம் காமராஜர் நகர் பஸ் ஸ்டாப் தொடங்கி காலை, மாலை நேரங்களில் தளவாய்புரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து செட்டியார் பட்டி பேரூராட்சி வழியான ரோட்டை கடந்து செல்வது சிரமத்திற்கு உள்ளானதாக மாறி உள்ளது. முன்பு மன்னராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மங்கம்மாள் சாலை எனும் அகலமான ரோடு தற்போது மாயமாகி சுருங்கிவிட்டது.
சுற்றியுள்ள 10 கிராமத்திற்கும் நுழைவாயிலாக இப் பகுதி இருப்பதால் பஸ்கள், லாரிகள் வாகனங்களுடன் அவசரத்திற்கான ஆம்புலன்ஸ்கள் போட்டி போட்டு போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.
தளவாய்புரத்திலிருந்து முகவூர், முத்துச்சாமிபுரம் வரை ரோட்டில் இருபுறமும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நடக்கும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாததால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
வாகனங்களின் இடையூறுகளால் பாதசாரிகள் டூ வீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் தேவையற்ற நெரிசலால் சிரமமும் தொடர்கதை ஆகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுநல வழக்கு நிலுவை
![]() |
சிரமத்தில் மாணவர்கள்
![]() |
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
![]() |
தீர்வு கண்காணிப்பு வேண்டும்:
இப்பகுதி ரோடு என்பது மாடர்ன் ரைஸ் மில்கள், ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி, பாவாடை நைட்டி, நெசவு, விவசாயம் போன்ற பணிகளுக்கான வாகனங்கள் சென்றுவர அடிப்படை ரோடாகும்.
தற்போதைய நிலையில் வீட்டிற்கு இரண்டு டூவீலர்களும், வீதிக்கு 10 கார்களும் பெருகிவிட்டன. இதனால் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அதிகரிப்பினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரோட்டின் பழைய அளவு வரை விரிவு படுத்துவதுடன், ஆக்கிரமிப்பு குறித்து கண்காணிப்பை தொடர வேண்டும். இது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.




