ADDED : பிப் 10, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பெ.சி., சிதம்பர நாடார் பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியை மந்த்ரா ஆங்கிலப்பள்ளி முதல்வர் ரஜினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
30 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியை உடற்கல்வி ஆசிரியர் ஷீலா பிளாரன்ஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியை மென்பொறியாளர் ஹேமா துவக்கி வைத்தார்.
30 வயதிற்கு மேலானவர்களுக்கான போட்டியை முன்னாள் மாணவர் ராஜி துவக்கி வைத்தார்.
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கி மெயின் பஜார் வழியாக மதுரை ரோடு உள்ள பெ.சி., சிதம்பர நாடார் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

