/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி
/
வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி
வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி
வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி
ADDED : டிச 24, 2024 04:16 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று காலை தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. பின்னர் அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா நடக்கும் போது பக்தர்கள் அரிசி தெளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நேற்று காலை 6:00 மணிக்கு வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து படி அளந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.