/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
/
மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED : மே 11, 2025 05:40 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு பூக்குழி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வருதல் நடந்தது. சிறப்பு நிகழ்வான 10 ம் நாள் பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவினை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல், உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மூலவருக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பின் மாரியம்மன் வீதி உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். டி.எஸ்.பி ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.