UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியில் அவதார திருநட்சத்திர உற்ஸவம், நவ. 4 முதல் துவங்கியது. தினமும் திவ்ய பிரபந்த சேவா காலம் நடந்தது.
நேற்று காலை ஆண்டாள், வடபத்திரசாயி, பெரியாழ்வார் சன்னதிகளில் மணவாள மாமுனிகள் எழுந்தருளி மங்களாசாசனம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
