ADDED : செப் 14, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு விழாவின் ஏழாம் நிகழ்வாக சுதந்திர போராட்ட தியாகிகள் பாரதியார், வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா நடந்தது.
துணைத் தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். புலவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் பாரதி ,வ.உ.சி படங்களை திறந்து வைத்து, ராஜுக்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் வெங்கட்ராமன், வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி மரகதவல்லி பழனியப்பன், ஆய்வு வட்ட செயலாளர் குருசாமி மயில்வாகனன் பேசினர். பொருளாளர் ராஜாராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். செயலாளர் ராதா சங்கர் நன்றி கூறினார்.