ADDED : அக் 28, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கலில் மருது சகோதரர்கள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக அந்தப் பகுதியில் இருந்த முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

