/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், கோவையில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையன் தமிழகம் முழுவதும் தேடுது போலீஸ்

ADDED : மார் 13, 2024 01:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், கோவை உட்பட பல்வேறு நகரங்களில் நகை கொள்ளையில் ஈடுபடும் முகமூடி கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகரைச் சேர்ந்தவர் சமுத்திரகனி, 62, கடந்த 2023 நவம்பரில் இவருடைய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோக்களில் இருந்த 22 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை போலீசாரின் விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது முகமூடி அணிந்து தனி ஒரு நபர் என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த நபர் ராஜபாளையம், மதுரை, நாகமலை புதுக்கோட்டை, உசிலம்பட்டி, கோவை சிங்காநல்லுார், சாய்பாபா காலனி உட்பட பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து அனைத்து நகரங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வந்த நிலையில், நவ., 15ல் மதுரை சிலைமானில் ஒரு வீட்டில் முகமூடி நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
பலநாட்களாக பூட்டி கிடக்கும் வீடுகள், கேமரா இல்லாமல் உயரம் குறைந்த காம்பவுண்ட் சுவர் உள்ள வீடுகள், புதிய குடியிருப்பு பகுதிகள், ரயில்வே தண்டவாள பாதையை ஒட்டி உள்ள வீடுகளை நோட்டமிட்டு இந்த முகமூடி கொள்ளையன் கொள்ளையில் ஈடுபடுவது போலீஸ் விசாரணையில் தெரிந்துஉள்ளது.
இதனால் மதுரை, விருதுநகர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படை போலீசார், தமிழகம் முழுவதும் முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.