நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: ஜன.17--: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கணித திருவிழா நடந்தது.
இதற்கு கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் பெளர்ணா வரவேற்றார்.
துறை மாணவிகள் மனித முன்னேற்றங்களை ரங்கோலி கோலம் இட்டு வெளிப்படுத்தினர். கணித கண்காட்சி நடந்தது. கணித மேதை ராமா னுஜர் பற்றி நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பேரா சிரியை காமாட்சி, நிவேதா, ஜெயப்பிரியா, அபிராமி, ஹிதயபானு, கண்மணி செய்தனர். கல்லூரியின் போக்கு வரத்து செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

