/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழகத்தில் இருமுனைப் போட்டி தான் ம.தி.மு.க., துரை கருத்து
/
தமிழகத்தில் இருமுனைப் போட்டி தான் ம.தி.மு.க., துரை கருத்து
தமிழகத்தில் இருமுனைப் போட்டி தான் ம.தி.மு.க., துரை கருத்து
தமிழகத்தில் இருமுனைப் போட்டி தான் ம.தி.மு.க., துரை கருத்து
ADDED : நவ 22, 2024 03:39 AM
சிவகாசி: தமிழகத்தில் மதவாத அணி, மதவாத சக்தியை எதிர்க்கும் தி.மு.க., அணி என இருமுனைப் போட்டி மட்டுமே உள்ளது, மூன்றாவது அணிக்கு இங்கு இடம் கிடையாது என ம.தி.மு.க., முதன்மைச்செயலாளர் துரை கூறினார்.
சிவகாசியில் அவர் மேலும் கூறியதாவது:
எல்.ஐ.சி., முகப்பில் ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டது ஹிந்தி திணிப்பு முயற்சியே. தமிழகத்தில் மதவாத சக்திகள் இருக்கும் ஒரு அணியும் மதவாத சக்தியை எதிர்க்கும் தி.மு.க., தலைமையிலான ஒரு அணியும் மட்டுமே உள்ளது. மூன்றாவது அணிக்கு இடம் கிடையாது.
நடிகர் விஜய் படித்தவர்,விவரமானவர். நான் அரசியலுக்கு வந்து நான்கு ஆண்டுகளே ஆகிறது. நான் அரசியல் குடும்பத்தில்பிறந்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடும் போது பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மதவாத சக்தி தமிழகத்தில் காலுான்ற எந்த விதத்திலும் விஜய் வாய்ப்பு வழங்கி விடக்கூடாது. கூட்டணியில் சேரும் கட்சிகள் 100 கோடி ரூபாய் வரை கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.