நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை நிலைத்த வளர்ச்சி மையம் சார்பில், கலசலிங்கம் மருத்துவமனையில் போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பராமரிப்பு பணியாளர்களுக்கு ஒரு நாள் மருத்துவ முகாம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன், இயக்குனர், தீபலட்சுமி முன்னிலை வகித்தனர். ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு சோதனை, ரத்த அழுத்த சோதனை, கண் பரிசோதனை மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஹெச்.ஆர். குந்தவை நன்றி கூறினார்.