ADDED : பிப் 23, 2026 05:07 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரியில் நாளை (பிப். 24) காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இதயம், நரம்பியல், தோல்நோய், கண், பல், காது, மூக்கு, தொண்டை என பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
பரிசோதனைகள் அனைத்தும் கட்டணமின்றி செய்யப்படும். எனவே கல்லமநாயக்கன்பட்டி, சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஓய்வூதியதாரர்களும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், என்றார்.

