தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : மார் 04, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் சிவகாமி புரம் சாலியர் சமுதாய கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம், கண் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.

சாலியர் சமுதாயத் தலைவர் குரு பாக்கியம் துவக்கினார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர் பாலாஜி பங்கேற்று குடலிறக்கம், பித்தப்பை, வெரிகோஸ் வெயின் ஆகிய பரிசோதனைகளை செய்து இலவச அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கினார்.

டாக்டர்கள் ஆனந்த சரவணன், ராஜகோபால், தேவி மகாலட்சுமி பங்கேற்றனர்.

ராஜபாளையம் அரசு கண் மருத்துவர் சித்ரா தலைமையில் கண் சம்பந்தப்பட்ட நோய் பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். 145 பயனாளிகள் கலந்து கொண்டனர். அன்னை சந்தியா கண்தான கழக நாகலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us