/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தை கையகப்படுத்திய மாவட்ட நிர்வாகம் மருத்துவ மாணவர்கள் விரக்தி
/
மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தை கையகப்படுத்திய மாவட்ட நிர்வாகம் மருத்துவ மாணவர்கள் விரக்தி
மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தை கையகப்படுத்திய மாவட்ட நிர்வாகம் மருத்துவ மாணவர்கள் விரக்தி
மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தை கையகப்படுத்திய மாவட்ட நிர்வாகம் மருத்துவ மாணவர்கள் விரக்தி
ADDED : செப் 20, 2024 06:17 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தை நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளதால் மருத்துவ மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்துதவற்காக 500க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் முழுவதும் குளிரிடப்பட்டு நவீன நாற்காலிகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விதமாக பல வசதிகள் கொண்டு பிரம்மாண்டமாக கலையரங்கம் கட்டப்பட்டது.
ஆனால் கலையரங்கம் திறக்கப்பட்ட நாள் முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்களை வேனில் அழைத்து வருகின்றனர்.
இதற்காக வரும் அரசியல் கட்சியினர், பயனாளிகளின் உடன் வருபவர்கள் மது குடித்து விட்டு பல சேட்டைகளை செய்கின்றனர். இவர்களில் சிலர் கலையரங்கத்திற்கு அருகே உள்ள மைதானத்தை திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற செயல்களால் மருத்துவக்கல்லுாரியின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கலை யரங்கத்திற்கு அருகே மருத்துவ மாணவிகளின் விடுதியும் உள்ளது. குடிமகன்கள் அடிக்கும் கொட்டத்தால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் முகம் சுளித்து, படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். மேலும் நலத்திட்டங்கள் வழங்கி முடித்து பின் கலையரங்கத்தை மருத்துக்கல்லுாரி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என கல்லுாரி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால் தற்போது துாய்மை பணியாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்தினர் சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நடக்க இருப்பதால் கல்லுாரி கலையரங்கத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. மேலும் புதிய மாணவர்கள் வருகையின் நடக்கும் வரவேற்பு, மருத்துவர் சீருடை அணிவிப்பு நிகழ்ச்சிகளின் போது கலையரங்கத்தை தருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி மருத்துவ மாணவர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நலத்திட்டங்கள் நடக்கும் நிகழ்ச்சியாக மாற்றிய பின் கலையரங்கதை கையகப்படுத்தியதால் மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.