/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மே 3ல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
மே 3ல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஏப் 30, 2025 06:44 AM
விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்துார் சட்டசபை தொகுதிகளில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மே 3 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்க இருக்கிறது.
அருப்புக்கோட்டையில் எம்.எல்.ஏ., அலுவலகம், பாலையம்பட்டி. ஆத்திபட்டி, ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளி, கணேஷ் நகர். சென்னிலக்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், பொம்மையாபுரம், பல்நோக்கு கட்டடத்திலும், சாத்துாரில் சமுதாயக்கூடம், நத்தத்துபட்டி. சமுதாயக்கூடம், ஓ.மேட்டுப்பட்டி. தேவர்மண்டபம், அண்ணாநகர்(டவுன்), சாத்துார். முருகன்கோவில் மண்டபம், சாத்துார் டவுன்.
நாடார் மகமை துவக்கப்பள்ளி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை. வெம்பக்கோட்டை டவுன், அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையலாம், என்றார்.