ADDED : ஜூலை 26, 2025 03:22 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியும், எச்.எல்., மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனம் இடையே தொழில்துறை ஒருங்கிணைந்த டிப்ளமோ பயிற்சி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் மெக்கானிக்கல், மின்னியல், மின்னணுவியல், பொறியியல் பிரிவுகளில் கல்வி பெரும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் முழுவதும் தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியம், இலவச உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மையமாகக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சி முடிவில் திறன் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சாரதி, உள் தணிக்கை துறை மேலாளர் சபிதா ஆகியோரும், பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர்வெள்ளைச்சாமி, முதல்வர் கந்தவேல்சாமி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லூரி தலைவர் முருகேசன், துறை தலைவர்கள் தாமோதரன், ஸ்ரீதேவி,தனலட்சுமி, வேலை வாய்ப்பு அதிகாரி தர்மராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.