ADDED : செப் 16, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணன் கோவில்: கலசலிங்கம் பல்கலைக்கழகம், மும்பை இந்தியன் பைனான்ஸ் நிறுவனம் இடையே மாணவர்கள் வங்கி தொடர்பான பட்டம், டிப்ளமோ சான்றிதழ் பெறுதல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் கையெழுத்தானது.
இதில் துணை வேந்தர் நாராயணன், பேங்கிங் மற்றும் பைனான்ஸ் நிறுவன பேராசிரியர் பிரதாப் குமார் பாப்னா கையெழுத்திட்டனர். துணைத் தலைவர் சசி ஆனந்த், பதிவாளர் வாசுதேவன், டீன் கணேசன், துணைத்தலைவர்கள் பாலமுருகன், தாமரை, தொழிற்சாலை உறவு இயக்குனர் முகிலன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.