UPDATED : நவ 25, 2026 05:52 PM
ADDED : நவ 25, 2026 05:52 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியும், ஆவியூர் சுந்தரம் பாஸ்டனர்ஸ் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.
இதற்கு கல்லூரி தலைவர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் ,நிறுவனத்தின் மனிதவள பொது மேலாளர் பிரசாத் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
இதன் மூலம் மாணவர்கள் தொழிற்சாலையில் பயிற்சியும், வேலை வாய்ப்பும் பெற முடியும். ஆசிரியர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவை பரிமாறிக்கொள்ள முடியும். படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்ப அறிவு மிக்கவர்களாக உருவாக முடியும் என, மனிதவள அதிகாரி முத்துப்பாண்டி கூறினார். கல்லூரி முதல்வர் கந்தவேல்சாமி, அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
