/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த மகன் கொலை; தந்தை, இளைய மகன் கைது
/
மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த மகன் கொலை; தந்தை, இளைய மகன் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த மகன் கொலை; தந்தை, இளைய மகன் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த மகன் கொலை; தந்தை, இளைய மகன் கைது
ADDED : செப் 09, 2025 12:16 AM

விருதுநகர்; விருதுநகர் பர்மா காலனியில் மனநலம் பாதிப்புக்குள்ளான மூத்த மகன் சதாம் உசேனை 27, மது போதையில் கொலை செய்த தந்தை கணவாய் பிச்சை 55, இளைய மகன் அஜிமிர் பாட்ஷா 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் பர்மா காலனி 5வது தெருவைச் சேர்ந்த சமையல் தொழிலாளி கணவாய் பிச்சை. இவரது மூத்த மகன் சதாம் உசேன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தலையில் அடிபட்டதால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இளைய மகன் அஜிமிர் பாட்ஷா. இவரும் காதல் தோல்வியால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டார். இரு மகன்களும் சமையல், ஓட்டல் வேலைகளுக்கு சென்று வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் வீட்டு உபயோகத்திற்கான டூவீலரை பெற்று செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சதாம் உசேனிடம் இருந்து டூவீலரை பெற்று செல்ல அஜிமிர் பாட்ஷா கேட்டும் கொடுக்காமல் அடித்துள்ளார். மது போதையில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.
இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு மது போதையில் வந்த தந்தையிடம் அடி வாங்கிய இளைய மகன் நடந்ததை கூறியதால் ஆத்திரமடைந்த கணவாய் பிச்சை, மூத்த மகனை சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் வலது பக்க மார்பில் குத்தினார். காயமடைந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணவாய் பிச்சை, இளைய மகன் அஜிமிர் பாட்ஷாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.