ADDED : ஏப் 08, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா டிரஸ்ட் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் பேசினார். மெட்ராஸ் சமூகப் பணியியல் பள்ளி துறை தலைவர் சங்கீத் கோபிநாத், ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியை விஜயலட்சுமி, கோவை கற்பகம் பல்கலை பேராசிரியர் பாலாஜி, பிகான் தொழில்நுட்ப நிறுவனம் திருமலையம்மாள் உள்ளிட்ட துறை வல்லுனர்கள் என்ன படிக்கலாம், எங்கு வேலை வாய்ப்பு என ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை டிரஸ்ட் உறுப்பினர் ராம சுப்ரமணியன் செய்திருந்தார்.
