ADDED : ஜன 27, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 33; பால் வியாபாரி. இவரது மனைவி சந்தனமாரி, 28. இரு குழந்தைகள் உள்ளனர். ராம்குமார் தன் உறவினர் காளிராஜ், 25, என்பவரை பால் வியாபாரத்திற்கு பணி அமர்த்தியிருந்தார்.
சந்தனமாரியுடன், காளிராஜுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டது. இரு குழந்தைகளுடன் சந்தனமாரி, காளிராஜுடன் தலைமறைவாகி, வெளியூரில் வசித்த நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் காளிராஜ், சந்தனமாரியுடன் ராஜபாளையம் திரும்பினார். மனைவியுடன் தொடர்பு வைத்தது தொடர்பாக, காளிராஜை தட்டிக்கேட்ட போது, ஆத்திரமடைந்த காளிராஜ், ராம்குமாரை வெட்டிக்கொலை செய்தார். ராஜபாளையம் வடக்கு போலீசார், காளிராஜை கைது செய்தனர்.

